உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை, இரு மடங்காகிறது: அமைச்சர் அமரவீர தகவல்

🕔 July 21, 2017

ள்ளூராட்சி சபைகளினுடைய உறுப்பினர்களின் தொகை இருமடங்கு அதிகரிக்கும் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்படவுள்ள தேர்தல் மூலமாகவே, இவ்வாறு உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கப்படவுள்ளது.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

புதிய உள்ளூராட்சி சபைகள் சட்ட மூலத்துக்கு அமைய, மொத்த சபைகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 8400 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இது தற்பொழுதுள்ள எண்ணிக்கையில் இரு மடங்காகும் என, அவர் விபரித்தார்.

“இந்த தொகையினை இன்னும் குறைத்துக் கொள்ள வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியி விரும்புகிறது. ஆனால், அதனைச் செய்ய முயற்சித்தால், தேர்தலை நடத்துவதற்கு இன்னும் காலம் தேவைப்படும். எனவே, தற்போதைய சட்ட மூலத்துக்கு உடன்பட வேண்டியேற்றபட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments