மாப்பிள்ளைத் தோழன் மைத்திரியை தேடி வந்த பீரிஸ்; நேற்றுக் கண்ட நெகிழ்ச்சியான தருணம்

🕔 July 20, 2017

னக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருக்குமளவுக்கு, நெருங்கிய நண்பரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, மிக நீண்ட காலத்தின் பின்னர், நபர் ஒருவர் சந்தித்திக்க வந்த நெகிழ்ச்சியான தருணமொன்று நேற்று புதன்கிழமை பாணந்துறையில் இடம்டபெற்றது.

‘மதுவில் இருந்து விடுதலையான நாடு’ தேசிய வேலைத்திட்டத்தின் களுத்துறை மாவட்ட மாநாடு, நேற்று பாணந்துறை நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்வு முடிவடைந்த பின்னர் மக்கள் மத்தியில் நடந்து சென்றார்.

அப்போது ஜனாதிபதியை சந்திக்க தலைமுடி நரைத்துப் போன  நபரொருவர் வந்திருந்தார். அவர் பெயர் ஜீ. ஜயசேன பீரிஸ்.

அவர் கையில் ஒரு கோப்பு இருந்தது. கடந்த காலத்தில் அவருக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இருந்து வந்த ஆழமான நட்பை நினைவூட்டும் ஆவணங்கள் அதில் இருந்தன. பாணந்துறை மாலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த அவர், ஓய்வுபெற்ற ஆசிரியரும் சமூக சேவையாளருமாவார்.

1960ம் ஆண்டுகளில் ஆசிரியராக நியமனம் பெற்ற ஜனசேன, ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலனறுவையின் அத்துமல்பிட்டிய பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றியிருந்தார்.

அந்தக் காலத்தில் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜயசேன பீரிஸின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார்.

ஜயசேன பீரிஸின் திருமணத்தின் போது, அவருடைய மாப்பிள்ளை தோழனாகவும் ஜனாதிபதி இருக்கும் அளவுக்கு, அவர்களிடையே நெருங்கிய நட்பு இருந்துள்ளது.

மறக்க முடியாத அந்த நட்புடன் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஜயசேன பீரிஸ் வந்தபோது, ஜனாதிபதியும் தனது நண்பரை அடையாளம் கண்டு கொண்டார்.

பிறகென்ன? இருவருக்குமிடையில் பழைய ஞாபகங்கள் மலர, ஒருவரையொருவர் ஆரத்தழுவி நட்பினைப் பரிமாறிக் கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்