தஸநாயக மீதான குற்றச்சாட்டு; விவாதிக்க வருமாறு பொலிஸ் பேச்சாளரை அழைக்கிறார் கம்மன்பில

🕔 July 17, 2017

டற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக மீது, அடிப்படையற்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுள்ளதாக, பிவிதுரு ஹெல உறுமய  கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

“பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருப்பது போன்று, 11 இளைஞர்கள் கடத்தி, காாணமல் போகச் செய்யபட்ட குற்றச்சாட்டுடன், தஸநாயக்கவுக்கு எதுவித தொடர்பும் இல்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானதும், அடிப்படையற்றவையுமாகும்” என்று, கம்மன்பில் மேலும் கூறினார்.

“இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரை, என்னுடன் விவாதமொன்றுக்கு வருமாறு சவால் விடுகிறேன். அதன்போது, மேற்படி குற்றச்சாட்டுக்கிணங்க யாரைக் கைது செய்திருக்க வேண்டுமென்பதை நான் உறுதியாகத் தெரிவிப்பேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடத்திக் காணாமல் போகச் செய்யப்பட்ட குற்றச்சாட்டினை, ஒரு போர் வீரர் பொறுப்பேற்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கவில்லை. ஆனால், இந்த விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென விரும்புகிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்பான செய்தி: கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தஸநாயக கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்