தமிழர் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் வேட்பாளர் கோடீஸ்வரன்

🕔 July 21, 2015

Kodeesvaran - 01– வி. சுகிர்தகுமார் –

ற்பசொற்ப ஆசைகளுக்காக கட்சிமாறாமல்,  தமிழ்த்தேசிய கூட்டமைப்பினைப் பலப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து, தமிழ்த் தேசியத்தினைப் பாதுகாப்பேன் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர், அரியநாயகம் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.

இதேவேளை, தனது முயற்சியாலும், உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் மக்களின் மனங்களைவென்று செயலாற்றுவதுடன், எந்தவொரு தருணத்திலும் தன் மனச்சாட்சிக்கு எதிராக செயற்படப் போவதில்லை என்றும், அவர் கூறினார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் தொட்பிலும், தனது கொள்கை விளக்கப் பிரகடனத்தைினை வெளியிடும் வகையிலும், வேட்பாளர் கோடீஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை, தனது இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்திருந்தார். இச் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அறப்போர் அரியநாயகத்தின் வழிவந்த அவரது பேரனாகிய நான், அவரின் தியாகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி பூண்டு செயற்படுகின்றேன். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக கடந்த ஒவ்வொரு தேர்தல்களிலும், பல உயிர் ஆபத்துக்களையும் எதிர்கொண்டு, அக்கட்சியினை வெல்ல வைப்பதில் அளப்பெரும் சேவையாற்றிய நான், என் மக்களுக்காக இறுதி மூச்சுவரை உதவி செய்யக்காத்திருக்கின்றேன் என்றார்.

இதேவேளை – காடுவெட்டி, தோட்டமாக்கி, ஊரை உருவாக்கி  – கலைவளர்த்து, வயலிலும் கடலிலும் ஆறுகளிலும் உண்டுகளித்து, இன்புற்று வாழ்ந்து வந்த எம்மினம்-  இன்று சகோதர இனத்தவர்களின் நகரங்களில் சாதாரண கூலிவேலை வேண்டி நிற்பதனை பார்த்து மனவேதனை அடைந்து நிற்கின்றேன். எமதுமக்களின் முயற்சிகளுக்கு, தகுந்த பலாபலன்களை பெற்றுத்தரும் முதலீடுகள் மூலம், இந்த அவல நிலையைப் போக்கியே தீருவேன் என அவர் உறுதியளித்தார்.

மேலும், தமிழர்கள் வாழும் மரபுரீதியான தமிழ் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கவும், பலப்படுத்தவும், நடவடிக்கைகளை எடுப்பதுடன், பறிபோன எல்லை பகுதிகளை மீட்பதிலும், தொடரும் அத்துமீறல்களை தடுப்பதிலும் கூடியகவனம் எடுப்பேன் என்றும் வேட்பாளர் கோடீர்வரன் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்