கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்க மறியல்
கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயகவை, எதிர்வரும் 19ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கொழும்பிலும், அதன் சுற்றுப் பகுதியிலுமுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில், கடற்படையின் முன்னாள் பேச்சாளரை குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்திருந்தனர்.
2008 – 2009 காலப் பகுதியில் 11 இளைஞர்களைக் கடத்தி, காணாமல் போகச் செய்தமைக்கு உதவியாகவும், உடந்தையாகவும் இவர் இருந்தார் எனக் கூறப்படுகிறது.