மூன்று நாள் விஜயம்; பங்களாதேஷ் புறப்பட்டார் ஜனாதிபதி

🕔 July 13, 2017

னாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை காலை, பங்களாதேஷ் பயணமானார்.

இந்த விஜயத்தின் போது, பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீட், பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இரண்டு நாடுகளினதும் பொருளாதாரம் மற்றும் விவசாயத்துறைகளை மேம்படுத்தும் பொருட்டு, உடன்படிக்கைகள் சிலவற்றிலும் இதன்போது அரச தலைவர்கள் கைச்சாத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் இறுதி நாளான்று வர்த்தக மாநாடொன்றிலும் ஜனாதிபதி பங்கேற்கவள்ளார்.

நாளை மறுதினம் சனிக்கிழமையன்று, தனது மூன்று நாள் விஜயத்தினை முடித்துக் கொண்டு, ஜனாதிபதி நாடு திருப்புவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்