கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தஸநாயக கைது

🕔 July 12, 2017

டற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி. தஸநாயக இன்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

வெலிசறையில் வைத்து, இவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

2008 – 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 11 இளைஞர்கள் காணாமல் செய்யப்பட்டமைக்கு உடந்தையாகவும், உதவியாகவும் இருந்தார் எனும் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, கோட்டே நீதிவான் நீதிமன்றத்தில் இவர் ஆஜர் செய்யப்படுவார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்ட பின்னர்,  2008 – 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்