சீனப் பெண்ணிடம் கொள்ளையிட்ட, பொலிஸ் சார்ஜன்ட் கைது

🕔 July 12, 2017

சீனப் பெண் ஒருவரிடமிருந்து 15 மில்லியன் ரூபாவினை கொள்ளையிட்டதாகச் சந்தேகிக்கப்படும் பொலிஸ் சார்ஜன்ட் உட்பட மேலும் இருவரை, வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சீன நாட்டுப் பெண்ணிடமிருந்து கடந்த மாதம் மேற்படி சந்தேச நபர்கள் மூவரும் வெள்ளவத்தையில் வைத்து, 15 மில்லியன் ரூபாவினை கொள்ளையிட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளர்.

கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன்ட் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் மூவரும் இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்