விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம்

🕔 July 11, 2017

டற்படை விமானமொன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேரும் பலியாகினர்.

குறித்த விமாத்தில் பலியானவர்கள் அனைவரும் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கே.சி. 13 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

குறித்த விமானம் வெடித்துச் சிதறியுள்ளதாகவும், அதில் பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விமானத்தில் பொதுமக்கள் எவரும் பயணித்தார்களாக என்பது தொடர்பில் தெரியவில்லை என, அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விமானம் 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, அதனுடனான தொலைத்தொடர்புகள் இல்லாமல் போனதாகக் கூறப்படுகிறது. 

Comments