கதிர்காமம் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை, தாக சாந்தி ஏற்பாடு

🕔 July 10, 2017

– கலீபா – 

திர்காமத்துக்கு வடமாகாணத்திலிருந்து கிழக்குமாகாணத்தின் கரையோர நகரங்கள் ஊடாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், இன்று திங்கட்கிழமை பொத்துவிலை சென்றடைந்துள்ளனர்.

வடக்கிலிருந்து இவர்கள் புறப்பட்டு இன்றுடன் நாற்பத்தியோராவது நாளாகிறது.

யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி கோயிலிலிருந்து, கதிர்காமத் திருத்தலத்திற்கு பாதயாத்திரையை ஆரம்பித்த இவர்கள், இன்றைய தினம் பொத்துவிலைச் சென்றடைந்துள்ளனர்.

வேல்சாமி தலைமையில் நூற்று இருபது பக்தர்கள் இப்பாதயாத்திரைக் குழுவில் கதிர்காமம் செல்கின்றனர். இவர்கள் எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி உகந்தை மலைக் கோயிலை சென்றடைந்து, அங்கிருந்து  காட்டு வழியூடாகப் பயணித்து, எதிர்வரும் இருபத்து மூன்றாம் திகதி கதிர்காமத் திருத்தலத்தின் கொடியேற்ற நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளவுள்ளனர்.

இதேவேளை, அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினால் நாளைய தினம் கதிர்காமத் திருத்தலத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பொத்துவில் நகரில் தாகசாந்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக, கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினால், தாக சாந்தி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்