இலங்கையில் முதன் முறையாக, இதய மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றம்
இலங்கையில் முதன் முறையாக, இதய மாற்று கிசிச்சையொன்று வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
கண்டி பொது வைத்தியசாலையில் இந்த சிகிச்சை நடைபெற்றதாக, சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது.
24 வயதுடைய ஒருவரின் இதயம், 34 வயதுடைய பெண் ஒருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் இதயம் 12 வீதமளவிலேயே செயற்பாட்டில் இருந்ததாக, கண்டி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக கூறினார்.
இதேவேளை, இதயத்தை நன்கொடையாக வழங்கிய நபரின் இரண்டு சிறுநீரகங்களும், இரண்டு நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இதயம் மற்றும் கிட்னிகள் பொருத்தப்பட்டவர்கள் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.