முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம்
🕔 July 9, 2017
– க. கிஷாந்தன் –
மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாமை காரணமாக, காயமடைந்த மூவர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் சென்.அன்றூஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் மற்றும் வேன் ஆகியவை, ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் இல் மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது, வேனும் சேதமடைந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
நுவரெலியாவிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கார், வேன் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிரே வந்த காருடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. அதிக வேகமே இவ்விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
இவ்விபத்தினால் சுமார் ஒரு மணித்தியாலம் இவ்வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.