எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலைய திறப்பு விழா; பிரதமருடன் ஹக்கீம், றிசாட் ஒரே மேடையில்

🕔 July 7, 2017
ன்னார் – எழுத்தூர் நீர் உள்வாங்கும் நிலையத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

‘உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதார திட்டத்தின்’ கீழ், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு இணைந்து இந் நிலையத்தை நிர்மாணித்துள்ளது.

இத்திட்டத்துக்கான நிதி அனுசரணையினை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரின் அழைப்பின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஸ்ரீ விடோவதி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எம். காதர் மஸ்தான், எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

2,200மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இக்கருத்திட்டம் பூர்த்தியடையும் போது, 55 ஆயிரம் மக்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்