முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமென பிரார்த்திப்போம்; பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லா

🕔 July 18, 2015

Hizbullah - 098– பழுலுல்லாஹ் பர்ஹான் –

லங்கை முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை பாதுகாத்து, முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்து, முஸ்லிம் சமூகம் – தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சூழ் நிலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்று, இப் புனித நோன்புப் பெருநாள் தினத்தில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ‘ஈதுல் பித்ர்’ வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த முப்பது நாட்களாக நோன்பிருந்து – இரவு பகலாக வணக்க வழிபாடுகளிலும், கடைசிப் பத்து நாட்களில் – இரவு பகலாக அல்லாஹ்வுக்கும் அவனது றசூலுக்கும் கட்டுப்பட்டு, பல்வேறுபட்ட அமல்களிலே முழு நாளையும் கழித்து, இன்று புனிதமான ‘ஈதுல் பித்ர்’ நோன்பு பெருநாளை கொண்டாடுகின்ற அன்புக்குரிய சகோதரர்கள் அனைவருக்கும், நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

நோன்பு காலங்களில் நாங்கள் மார்க்க விடயங்களை அறிந்து கொண்டோம்,குறிப்பாக பல்வேறுபட்ட தியாகங்களை எங்களுடைய வாழ்க்கையில் அனுபவித்தோம். அல்லாஹ், றசூலுக்காக வேண்டி , அல்லாஹ்வுடைய கட்டளைக்காக வேண்டி, அல்லாஹ் – ஹலால் ஆக்கிய உணவுகளையும் பகல் நேரங்களில் சாப்பிடாமல் தவிர்த்திருந்தோம்.

மனிதனுடைய வாழ்க்கை – நோன்பு மாதத்தில் மாத்திரமன்றி, வருடம் முழுவதும், எவ்வாறு  அமைய வேண்டுமென்பதை நோன்பு வலியுறுத்துவதோடு, தியாகத்தையும், மார்க்கத்தையும் கொண்டு மனிதனை பக்குவப்படுத்துகின்றது.

இந்த நோன்பு மாதத்தில் நாங்கள் பெற்ற தியாகங்களை,பெற்ற உணர்வுகளை, பெற்ற அறிவுகளை இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் கடைபிடிப்போமாக.

குறிப்பாக, முஸ்லிம் சமூகம் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல்வேறுபட்ட துன்பங்களை, துயரங்களை, சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கின்ற இந்த சூழ் நிலையிலே, சர்வதேச சக்திகளும் – தேசிய ரீதியிலான சக்திகளும் முஸ்லிம்களை இல்லாமல் செய்து ,முஸ்லிம்களை மோதவிட்டு ,முஸ்லிம்களை அழித்து, முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை அழித்து, முஸ்லிம்களை அநாதையாக்குவதற்காகத் திட்டமிட்டு செயற்படுகின்ற இந்த சூழ் நிலையிலே, முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை பாதுகாத்து ,முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்து, முஸ்லிம் சமூகம் – தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சூழ் நிலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போமாக.

அல்லாஹ்விடத்திலே நம் எல்லோருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தையும், குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் மிக நிம்மதியாவும், சிறப்பாகவும் வாழ்வதற்கான சூழ் நிலைகளை – எல்லாம்வல்ல அல்லாஹ் உருவாக்க வேண்டுமென்று,  நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போமாக.

உங்கள் எல்வோருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்