பொய்யான உறுதிப்படுத்தல் கடிதம் வழங்கிய அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

🕔 July 6, 2017
தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கடமையாற்றா­த­வர்­களுக்கு, தொண்­டர் ஆசிரியர்களாகக் கட­மை­யாற்­றுகின்றனர் என்று, பொய்யான உறு­திப்படுத்தல் கடிதம் வழங்­கிய, பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும் அதனை உறுதிப்படுத்திய­ வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைகளுக்கு உட்படுத்தப்­ப­ட­வுள்­ளனர் என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விரை­வில் இந்த விசா­ரணைகள் நடத்­தப்­ப­டும் என்று  மாகாணக் கல்வி அமைச்­சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தகு­தி­யற்ற தொண்­டர்­ ஆசிரியர்களுக்கு உறு­திப்­ப­டுத்­தல் கடி­தம் வழங்­கிய அதிபர்கள் மற்றும் அதனை உறு­திப்­ப­டுத்­திய வல­யக் கல்­விப்­ப­ணிப்­பா­ளர்­க­ளுக்­கு எதி­ரா­கவும்­ உரிய நடை­மு­றை­க­ளின் பிர­கா­ரம் திணைக்­கள ரீதி­யி­லான விசாரணைகள் நடத்­தப்­ப­டவுள்ளன என்றும் கூறப்படுகிறது.

நிய­ம­னம் வழங்­க­லிலுள்ள விதி­மு­றை­க­ளின் பிரகாரம், தொண்­ட­ரா­சி­ரி­யர்­கள் 2011 டிசெம்­பர் முத­லாம் திக­திக்கு முன்­பி­ருந்து தொடர்ச்­சி­யாகப் பணி­யாற்­றி­யி­ருக்க வேண்­டும் என்ற நிபந்­த­னை­யுண்டு.

ஆனால், நியமனம் வேண்டி விண்ணப்பித்துள்ள பலர், 2011 ஆம் ஆண்­டி­லேயே உயர்தரப் பரீட்­சைக்கு முதல் தட­வை­யா­க­வும் மேலும் சிலர் இரண்­டா­வது தடவையாகவும் தோற்­றி­யுள்­ள­னர் என அறிய முடிகிறது.

அவ்­வா­றி­ருந்­தும், குறித்த நபர்களுக்கு பாட­சா­லை­க­ளின் அதி­பர்­கள் உறு­திப்­ப­டுத்­தல் கடி­தம் வழங்­கி­யுள்­ள­னர். இது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத செயல் என்று கூறப்படுகிறது.

Comments