மனிதர்களுக்கு நடத்துவது போல், பிரதி அமைச்சருடைய நாய்க்கு இறுதிச் சடங்கு: களனியில்
மனிதர்களின் இறுதிச் சடங்கு போல், பிரதியமைச்சர் ஒருவருடைய நாயின் இறுதிச் சடங்கு, களனிப் பிரதேசத்தில் நடைபெற்றது.
இளைஞர் நாடாளுமன்றத்தின் பிரதி பிரதம மந்திரி மலித் சுதுசிங்க என்பவரின் நாயினுடைய இறுதிச் சடங்கே இவ்வாறு நடைபெற்றது.
மிஷல் எனும் பெயருடைய பிரதியமைச்சரின் நாய் இறக்கும் போது, அதற்கு வயது 06 ஆகும். எதிர்வரும் நொவம்பர் மாதம் 20ஆம் திகதி, மிஷலின் ஏழாவது பிறந்த தினமாகும்.
சிறு நீரக செயலிழப்பு காரணமாகவே மிஷல் மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நாயானது இளைஞர் நாடாளுமன்ற பிரதி பிரதம மந்திரி மலித் சுதுசிங்கவின் மிகவும் அன்புக்குரிய செல்லப் பிராணியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நாயை, அவர் ஒரு போதும் கூட்டில் அடைத்ததோ, கட்டிப்போட்டதோ கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.