குளிர்ப் பிரதேசத்தில் காய்த்துக் குலுங்கும் ஈச்சை; நுவரெலியாவில் அதிசயம்

🕔 July 5, 2017

க. கிஷாந்தன் –

லவாக்கலை பொலிஸ் நிலையத்தில் நடப்பட்ட ஈச்சை மரமொன்று, 35 வருடங்களுக்குப் பின்னர் காய்த்து – கனி தந்துள்ளது.

வெப்பமான காலநிலை நிலவும் பிரதேசங்களிலேயே வளரும் என்று நம்பப்பட்ட ஈச்சை மரமானது, அதிக குளிர் பிரதேசமான நுவரெலியா மாவட்டத்தின் – தலவாக்கலை பகுதியில் இவ்வாறு காய்த்து – கனி தந்துள்ளமையானது ஆச்சரியமானதாகும்.

தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் வளர்க்கப்பட்ட  இந்த மரத்தில், தற்போது 05 குலைகள் காய்த்துப் பழுத்துள்ளன.

இந்த அதியசயத்தைக் காண்பதற்காக, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்