கருணை மனதை, அதிகம் வெளிப்படுத்திய ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

🕔 July 4, 2017

நாடாளுமன்ற உறுப்பினர்களில் 95 பேர், தங்களின் ஒரு மாத சம்பளத்தினை, அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிராணப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர்.

இவ்வாறு தமது மாத சம்பளத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கியவர்களில் 63 பேர் ஐ.தே.கட்சிக்காரர்களாவர்.  24 பேர் ஐ.ம.சு.முன்னணியைச் சேர்ந்தவர்களாவர்.

மேற்படி ஒவ்வொருவரும் தமது மாதச் சம்பளமான 54,285 ரூபாவினை இவ்வாறு, நிவாரணப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர்.

ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கொடுப்பனவுகளை, புதிய கல்வி அபிவிருத்திக் கணக்குக்கு வைப்புச் செய்துள்ளனர்.  ஐ.ம.சு.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் – தமது பணத்தினை ஜனாதிபதியினூடாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அனர்த்த நிவாரணக் கணக்குக்கு வழங்கியுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிரணி மற்றும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித் தனியாக கொடுப்பனவுகளை சேகரித்த போதிலும், அவர்களின் சம்பளத்திலிருந்து இதற்காக பணம் கழிக்கப்படவில்லை என தெரியவருகிறது.

நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களில் அரைவாசிக்கும் குறைந்தவர்களே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது சம்பளத்தினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, அவரின் மாதச் சம்பளத்துக்கு மேலதிகமாக, அதற்கு அண்மித்ததொரு தொகை, வேறு கொடுப்பனவுகளாக வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்