சீனா – இந்தியா சண்டித்தனம் பேசுகின்றன; எல்லையில் வலுக்கிறது முறுகல்

🕔 July 4, 2017

சீனாவின் எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் நுழைந்து, சீன ராணுவத்தினரின் வழக்கமான கடமைகளை செய்யவிடாமல் தடுத்ததன் மூலம்,  எல்லை தொடர்பான சர்வதேச சட்டத்தை இந்தியா மீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சீன – இந்திய ‘சிக்கிம்’ எல்லையில்,  இந்தியா படைகளை குவித்திருப்பது நம்பிக்கை துரோகம் எனவும் சீனா விமர்சித்துள்ளது.

“இந்திய – சீன எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. சீனாவின் பகுதிக்குள் நுழைந்து சீன ராணுவத்தினர் வழக்கமான பணியை செய்யவிடாமல் தடுத்ததன் மூலம், எல்லை தொடர்பான சர்வதேச சட்டத்தை இந்திய ராணுவத்தினர் மீறிவிட்டனர்” எனவும் சீனா கூறியுள்ளது.

எனவே, சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து இந்திய ராணுவம் விலகி, அமைதி நிலவ வழிவகை செய்யவேண்டும் என, சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

இப்போதிருக்கும் இந்தியா, 1962ம் ஆண்டு சீன யுத்தத்தின்போது இருந்த இந்தியா அல்ல என, இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்னதாக கூறியிருந்தார்.

இது குறித்து சீனா தெரிவிக்கையில்; சீனாவும் மாறியிருப்பதாகவும், அதன் பகுதிகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பூட்டான், சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப்பகுதியான டோக் லா வில் கடந்த ஒரு மாதமாகவே பதற்றமான சூழல் நிலவுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்