மஹிந்தவுக்கு மாளிகை கொடுத்த ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராகிறார்

🕔 July 2, 2017

பிரபல வர்த்தகரும், கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவருமான ஏ.எஸ்.பி. லியனகே, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ, ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்பட்டமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஏ.எஸ்.பி. லியனகே நியமிக்கப்படவுள்ளார்.

கட்டாரிலுள்ள லியனகே, இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்ததும் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம், இவர் கட்டார் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த லியனகே; “மாகாண ஆளுநர் பதவியொன்றினையே தனக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பப்பட்டார். ஆனால், அதற்கான வெற்றிடங்கள் எவையும் காணப்படவில்லை. அதனாலேயே, தூதுவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சில காலங்களுக்கு முன்னர் தனது பீக்கொக் மாளிகையை ஏ.எஸ்.பி. லியனகே வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்