வடக்குக்கு புதிய அமைச்சர்கள்; அனந்தியும் பதவியேற்கிறார்
வட மாகாணத்தின் புதியகல்வி அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரன் நியமிக்கப்படவுள்ளார்.
இதேவேளை, மகளிர் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகத் தெரவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் பதவிகளை நிர்ப்பந்தத்தின் பேரில் ராஜிநாமாச் செய்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, அந்த இடங்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
வடக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள், நாளை வியாழக்கிழமை, ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவிகளை பொறுப்பேற்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.