முஜிபுர் ரஹ்மான் வணங்கினார், பௌத்தர்கள் பார்த்து ரசித்தனர்: கிளம்புகிறது சர்ச்சை

🕔 June 28, 2017

– அ. அஹமட் –

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்களின் நடைமுறைக்கும் இஸ்லாத்துக்கும் மாற்றமான முறையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இரு கரம் கூப்பி வணங்கியதாகக் கூறப்படுகிறது.

‘லக்ஹிரு செவன’ வீடமைப்புத் திட்டம் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ஏ.எச்.எம். பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி வருகை தந்த சமயம், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ஜனாதிபதியை குனிந்து, இரு கரம் கூப்பி வணங்கியுள்ளார்.

முஜிபுர் ரஹ்மான் – கை கூப்பி வணங்கும் பௌவியத்தை, அந்த இடத்தில் நின்றிருந்த அமைச்சர் சம்பிக்க மற்றும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் ஏனையவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

அண்மையில் அமைச்சர்  கபீர் ஹாசிமும்,  இவ்வாறு கை கூப்பி வணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments