சம்மாந்துறையில் போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணர்வு ஊர்வலம்
– யூ.எல்.எம். றியாஸ் –
தேசிய போதைப் பொருள் தடுப்பு மாதத்தினையொட்டி, சம்மாந்துறையில் இன்று வெள்ளிக்கிழமை, விழிப்பு ஊர்வலமொன்று இடம்பெற்றது.
சமூகத்தில் அதி வேகமாக பரவிவரும் போதைப்பொருள் பாவனையை, எமது நாட்டிலிருந்து முற்றாக இல்லாமல் செய்யும் முகமாக, ஜூலை 09 ஆம் திகதி முதல் – ஓகஸ்ட் 08ஆம் திகதி வரையிலான ஒரு மாதத்தினை, போதைப்பொருள் தடுப்பு மாதமாக, ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதற்கமைவாக, சம்மாந்துறையில் இன்று வெள்ளிக்கிழமை – விழிப்புணர்வு ஊர்வலமொன்று இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலகமும்,சம்மாந்துறை பிரதேச சபையும் இணைந்து, இவ் ஊர்வலத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் இடம்பெற்ற, இந்த ஊர்வலத்தில், போதைப் பொருளால் ஏற்படும் தீங்குகள்,சமூக சீர்கேடுகள் போன்றவற்றை எடுத்துக் கூறும் வகையிலான பதாதைகளை ஏந்தியவாறு, பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் சமூகமளித்திருந்தனர்.