பிரதியமைச்சர் அருந்திகவிடம் விசாரணை

🕔 June 27, 2017

பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ, நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு, இன்று செவ்வாய்கிழமை காலை வருகை தந்தார்.

வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே, அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, அருந்திக பெனாண்டோ அண்மையில் ஜப்பானில் வைத்து சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து வாக்குமூலம் அளிக்கவே பிரதியமைச்சரை,  நிதி குற்ற விசாரணைப் பிரிவு அழைத்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்