அக்கரைப்பற்று பொலிஸாரின் அக்கறை; பாராட்டுக்குரியது

🕔 June 26, 2017

– ஆசிரியர் கருத்து –

ண்டிகை காலங்களில் விபத்துக்கள் அதிகமாக நிகழ்கின்றமை வழமையாகும். குறிப்பாக இந்த நாட்களில்  மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வோரில் கணிசமானோர் அதிக வேகத்துடன் பயணிப்பது, தலைக் கவசங்கள் இன்றி பயணிப்பது, ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டுக்கு மேற்பட்டோர் பயணிப்பது என, சட்டத்தை மீறுகின்றமையினால், அதிக விபத்துக்கள் நிகழும்.

அந்த வகையில், இன்றைய நோன்பு பெருநாள் தினத்தில் அக்கரைப்பற்று பொலிஸார், இது குறித்து அதிக அக்கறை செலுத்தியிருந்தமை பாராட்டுக்குரியதாகும்.

பெருநாள் தினத்துக்கு முன்னதாகவே, விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு வாகன ஓட்டுனர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என, பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் ஊடாக, அக்கரைப்பற்று பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்திருந்தனர். அதேவேளை, இன்றைய பெருநாள் தினத்தில், பிரதான வீதிகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் சட்டத்தை மீறுவோரைக் கடுமையாகக் கண்காணித்தும் வந்தனர்.

இதன் காரணமாக, மோட்டார் சைக்கிள்களில் ‘பறக்கும்’ இளைஞர்களை இன்று மிகக் குறைவாகவே காணக் கிடைத்தது. அதனால், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குள் இன்றைய தினம் விபத்துக்களும் பாரியளவில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் இல்லை.

போக்குவரத்துத் தொடர்பில், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களிடம் அனுமதிப்பத்திரம் இருக்கிறதா, தலைக்கவசம் அணிந்திருக்கிறாரா என்று பார்ப்பதுடன் மட்டும், பொலிஸாரின் கடமைகள் முடிந்து விடுவதில்லை. அதற்கு மேலாகவும் அக்கறை செலுத்த எவ்வளவோ இருக்கின்றன என்பதற்கு, அக்கரைப்பற்று பொலிஸாரின் இன்றைய செயற்பாடு நல்ல உதாரணமாகும்.

அக்கரைப்பற்று பொலிஸார் குறித்து, அதிலும் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் குறித்து, அவ்வப்போது புகார்களும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட, இன்றைய தினம், அக்கரைப்பற்று பொலிஸார் எடுத்துக் கொண்ட கரிசனையினை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

அந்த வகையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல், நிலைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், இது விடயத்தில் பாராட்டுக்குரியவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்