இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்; மர்ம முடிச்சை அவிழ்த்தார், முன்னாள் உளவாளி

🕔 June 23, 2017

“பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி டயானாவை நான்தான் கொன்றேன்” என்று, ஜோன் ஹொப்கின்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

எம்.ஐ.5 எனும் பிரித்தானிய உளவு நிறுவனத்தின் முன்னாள் பணியாளரான இவர், தனது அதிகாரியின் உத்தரவுக்கிணங்கவே, இளவரசி டயானாவை, தான் கென்றதாகக் கூறியுள்ளார்.

80 வயதுடைய ஹொப்கின்ஸ், எம்.ஐ.5 உளவு நிறுவனத்தில் 38 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

20 வருடங்களாக இளவரசி டயானாவின் மரணம் தொடர்பில் இருந்து வந்த மர்ம முடிச்சு, ஜோன் ஹொப்கின்ஸ் மூலம் அவிழ்க்கப்பட்டுள்ளது.

உடல் நலமின்மை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னர், ஜோன் ஹொப்கின்ஸ் இந்த மாபெரும் உண்மையினை அம்பலப்படுத்தியுள்ளார்.

தான் மரணத்தின் அருகில் இருப்பதாலும், இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட பலர் ஏற்கனவே மரணித்து விட்டதாலும், இந்த உண்மையினை தான் தெரிவிப்பதாக ஜோன் ஹொப்கின்ஸ் கூறியுள்ளார்.

“டயானாவை கொல்லுமாறு எனது மேலதிகாரி, எனக்கு வழங்கிய உத்தரவுக்கமைவாகவே, டயானாவை கொன்றோம். டயானாவை கொல்லுமாறு எனது மேலதிகாரிக்கு இளவரசர் பிலிப் (மகாராணியின் கணவர்) நேரடியாக உத்தரவிட்டிருந்தார். அதனால், ஒரு விபத்துப் போல், அந்தக் கொலையினை நடத்தி முடித்தோம்” என அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நபர்களைக் கொன்றொழிப்பதுதான், தனக்கான பிரதான பணியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“அதற்கு முன்னர் ஒரு பெண்ணை, அதுவும் இளவரசி போன்ற ஒருவரை நான் கொன்றதில்லை. ஆனாலும், எனக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்குப் பணிந்து அதை நான் செய்தேன். நாட்டுக்காகவும், மகா ராணிக்காகவும் டயானாவை கொன்றேன்” என்று, அவர் விபரித்தார்.

“அரச குடும்பத்தின் அதிகமான ரகசியங்களை டயானா தெரிந்து வைத்துள்ளார். மேலும், அவர் கடும் கோபத்திலும் உள்ளார். எனவே, தனக்கு தெரிந்த ரகசியத்தை அவர் பகிரங்கப்படுத்தி விடுவார். எனவே, அவரைக் கொல்ல வேண்டும்” என்று, எனது மேலதிகாரி என்னிடம் கூறினார் என, ஜோன் ஹொப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், “எனது கடமையை நான் செய்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்