13 நிபந்தனைகளை நிறைவேற்றினால் தடை நீங்கும்; கட்டாருக்கு பட்டியல் சமர்ப்பிப்பு

🕔 June 23, 2017

ல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, துருக்கி ராணுவ தளங்களில் ஒன்றை மூடுவது மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது உள்ளிட்ட 13 நிபந்தனைகளை நிறைவேற்றினால், கட்டார் மீதான தடையினை நீக்குவதாக சஊதி அரேபியா உள்ளிட்ட நான்கு அரபு  நாடுகள் தெரிவித்துள்ளன.

கட்டாரிடம் சஊதி உள்ளிட்ட நான்கு நாடுகளும் எதிர்பார்க்கும் விடயங்களைப் பட்டியலிட்டுள்ளன. அந்தப் பட்டிலியலில்தான் மேலுள்ள விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

13 விஷயங்கள் அடங்கிய அந்த பட்டியலில், அல் ஜஸீரா தொலைக்காட்சியை மூடுவது, ஒரு துருக்கி ராணுவ தளத்தை மூடிவிட்டு, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடனான எல்லா தொடர்புகளையும் துண்டிப்பது உள்ளிட்ட விடயங்கள் அடங்குகின்றன.

கட்டாருக்கும், சஊதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கட்டாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்டார் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ள, சஊதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள், கட்டாருடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்