பொலிஸ் பேச்சாளர் பியந்த ஜயகொடி ராஜிநாமா

🕔 June 23, 2017

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்துள்ளதாக, தனது பேஸ்புக் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.

தற்போதைய தனது உடல் நிலை காரணமாக, இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் பேச்சாளர் பதவிக்கு பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர நியமிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவே, ஊடகத்துறையினர் மற்றும் பேஸ்புக் நண்பர்கள் ஆகியோருக்கும் அவர் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொலிஸ் பேச்சாளர் பதவியிலிருந்து பிரியந்த ஜயகொடி ராஜிநாமா செய்தமைக்கான உத்தியோகபூர்வ கடிதம்  இன்னும் கிடைக்கவில்லை என,  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments