அரசியலில் ஈடுபடுவதற்கான வயதெல்லை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும்: பெப்ரல் வலியுறுத்தல்
பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடுவதற்கான அதிகபட்ச வயதெல்லை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும் என்று, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார்.
மக்கள் பிரதிநிதியாக, நபரொருவர் குறித்த வயது வரையில்தான் பதவி வகிக்க முடியும் என்கிற வரையறை நிர்ணயிக்கப்படுதல் வேண்டும்.
வயதான பல அரசியல்வாதிகள் அவர்களுக்கு பொருத்தமற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சகல தொழில்களுக்கும் வயதெல்லைகள் இருக்கின்றன. ஆனால் அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட வயதெல்லை இல்லாமை கவலைக்குரிய விடயம் எனவும் பெப்ரல் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.