புதிய முறையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்; பெரிய கட்சிகள் இரண்டும் இணக்கம்

🕔 June 20, 2017

புதிய தேர்தல் முறைமையின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தல்ளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை, இவ்விடயத்தில் இணக்கம் கண்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற சந்திப்பில் மேற்படி இணக்கம் எட்டப்பட்டதாகத் தெரியவருகிறது

இந்த சந்திப்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்