சாதனை படைத்த புதிது செய்தி; இரண்டு நாட்களில் 01 லட்சம் பேர் பார்வை

🕔 June 18, 2017

‘புதிது’ செய்தித்தளத்தில் பதிவிடப்பட்ட செய்தியொன்றினை இரண்டு நாட்களில் சுமார் 01 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் செய்தியே, இவ்வாறு மிக அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், புதிது செய்தித் தளத்தில், மிகக் குறுகிய காலத்தில் மிக அதிகமானோர் பார்வையிட்ட செய்தியாக, மேற்படி செய்தி பதிவாகியுள்ளது.

93,164 பேர் பார்வையிட்டுள்ள மேற்படி செய்தியினை, 1408 பேர் இதுவரையில் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிது செய்தித்தளம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களே ஆன நிலையில், அதற்கான வாசகர்கள் தொகை, மிக கணிசமாக அதிகரித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எனவே, வாசகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், புதிது செய்தித்தளமும் செயற்படும் என்கிற நம்பிக்கையை இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம்.

தொடர்ந்தும் புதிது செய்தித்தளத்துடன் இணைந்திருங்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்