கலாநிதி றமீஸ் அபூபக்கர் அமெரிக்கா பயணம்

🕔 June 16, 2017

 

– எம்.வை. அமீர் –

‘சமய பல்வகைத்தன்மை’ (Religious Pluralism) எனும் பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்காக, புலமைப்பரிசில் பெற்று, தென் கிழக்கு பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் இம்மாதம் 22 ம் திகதி அமெரிக்கா பயணமாகிறார்.

இரண்டு மாதங்களைக் கொண்ட இப்பயிற்சி நெறி, அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான டெம்பில் பல்கலைக்கழகத்தில் (Temple University) இடம்பெறவுள்ளது.

உலகில் பல பாகங்களில் இருந்தும் 18 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இப்பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து இவர் மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனமுரண்பாடு, சமய சகிப்பின்மை (Religious intolerance) போன்ற சிக்கல்களால் நிறைந்த இலங்கைக்கு, இவரின் இப்பயிற்சி நெறி பல்வேறு வகையில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரி பணிப்பாளராவும், அப்பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளருமாகவும் கலாநிதி றமீஸ் அபூபக்கர் பதவி வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்