ஞானசார தேரரை மறைத்து வைத்திருப்பது யார்; தகவல் சொன்னார் மஹிந்த
அரசாங்கம்தான் ஞானசார தேரரை மறைத்து வைத்திக்கிறது என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறினார்.
இனவாதத்தை பரப்புகின்ற அமைப்புக்களை ஒழிப்பதற்காக புதிய சட்டங்கள் தேவையில்லை என்று இதன்போது கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அதனைச் செய்வதற்கு பொலிஸாருக்கு தற்போதிருக்கின்ற அதிகாரங்கள் போதுமானது என்றும் தெரிவித்தார்.