கொள்ளையர்களுக்கு வந்த கருணை; நகையைப் பறி கொடுத்தவருக்கும் ஒரு பங்கு: அச்சுவேலியில் சம்பவம்
🕔 June 16, 2017
– பாறுக் ஷிஹான் –
கொள்ளையிட்டுச் சென்ற நகைகளை ஒரு வாரத்தின் பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டு வளவினுள் வீசிச் சென்ற சம்பவமொன்று அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை பதிவானது.
அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியிலுள்ள வீடொன்றில், கடந்த 09ஆம் திகதி கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றது. இந்த நிலையில் ஒரு வாரம் கடந்த நிலையில், கொள்ளையிடப்பட்ட நகைகள், பேணி ஒன்றினுள் வைத்து, குறித்த வீட்டு வளவினுள் வீசப்பட்டிருந்தது.
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் திருமணம் இடம்பெறவிருந்தது. இந்த நிலையில், கடந்த 09ம் திகதி மாலை வீடு புகுந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த மணமகனின் தாயினை தாக்கி விட்டு, 52பவுண் நகைகள் மற்றும் 16 லட்சம் ரூபா பணம் என்பவற்றை எடுத்துச் சென்றிருந்தனர்.
இந் நிலையில் நேற்றையதினம் வியாழக்கிழமை கொள்ளையிடப்பட்ட வீட்டு வளவிலுள்ள தென்னந்தோட்டத்தை துப்பரவு செய்வதற்காக வந்திருந்த கூலியாள், தென்னங்குவியலுக்கு மேல் போடப்பட்டிருந்த தகரப்பேணி ஒன்றினை கண்டெடுத்துள்ளார். அதற்குள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு சில இருந்தன.
சம்பவத்தை அறிந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர். றஞ்ஜித் மாசிங்க ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளுக்காக மோப்ப நாயின் உதவியும் வேண்டப்பட்டிருந்தது.
அத்துடன் கைவிரல் அடையாளங்களை பரிசோதணை செய்யும் அதிகாரிகள் வருகை தந்து பரிசோதனை மேற்கொண்டது. சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவாகியிருந்த கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.