சு.க. மத்திய குழுக் கூட்டத்துக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

🕔 July 15, 2015

Courts order - 01ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுக் கூட்டம், அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி  நடைபெறுவதற்கு தடைவிதிக்குமாறு கோரி, இன்று புதன்கிழமை நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவினை ஆராய்ந்த நீதிமன்றம், சுதந்திரக் கட்சி தலைவரின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், இன்று புதன்கிழமை இரவு நடைபெறும் என, கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா அறிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – நேற்றைய தினம் ஆற்றிய விசேட உரை தொடர்பில், தீர்மானமொன்றி எடுப்பதற்காகவே, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெறவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைக் கவனத் கொண்ட, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த கூட்டத்தை ரத்துச் செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே, சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தினை, கட்சித் தலைவரின் அனுமதியின்றி நடத்துவதற்கு நீதிமன்றத் தடையுத்தரவும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்