ஹக்கீமின் இப்தாரை புறக்கணித்து, மானமுள்ளவர்கள் என்பதை, அட்டாளைச்சேனை மக்கள் நிரூபிக்க வேண்டும்: புத்திஜீவிகள் கோரிக்கை

🕔 June 15, 2017

– நவாஸ் –

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வினை, அந்த ஊரின் மானமுள்ள மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தை  தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் பெயரால் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்ற ரஊப் ஹக்கீமையும், அவர் கலந்து கொள்ளும் நிகழ்வினையும் அட்டாளைச்சேனை மக்கள் புறக்கணிப்பதுதான், அவருக்கு அப் பிரதேச மக்கள் வழங்கும் பதிலடியாக அமையும் என்றும் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு இதுவரையில் மூன்று தடவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாகத் தெரிவித்துள்ள ரஊப் ஹக்கீம், இது வரையில் அதனை நிறைவேற்றாமல், அந்தப் பிரதேசத்தை ஏமாற்றி வருகின்றமையானது, அப் பிரதேச மக்களை முட்டாள்களாக்கும் செயற்பாடாகும் எனவும், அட்டாளைச்சேனைப் பிரதேச புத்திஜீவிகள் கூறுகின்றனர்.

தம்மை தொடர்ந்தும் 15 வருடங்களாக ஏமாற்றி வரும் ஒரு நபரின் பின்னால்,  ஒரு மக்கள் கூட்டம் எதுவித சொரணையுமற்று அலையுமாயின், அந்த மக்கள் கூட்டத்தினை பரிதாபத்துக்குரியவர்களாகவே பார்க்க வேண்டும் என்றும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, ரஊப் ஹக்கீம் நாளைய தினம் கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வினை புறக்கணிப்பதன் மூலம், அட்டாளைச்சேனை மக்களும் மானமுள்ளவர்கள்தான் என்பதை, நிரூபிக்க வேண்டும் என்றும் புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்