ஞானசார தேரரை கைது செய்யுமாறு, கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவு
ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜராகுமாறு ஞானசார தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் வருகை தராமையினாலேயே, இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மேல்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஞானசார தேரர் தொடர்சியாக 03 தடவை அந்த அழைப்பினைப் புறக்கணித்திருந்தார். இந்த நிலையில் ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு அரச தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.
இந்த நிலையிலேயே, ஞனாசார தேரரை கைது செய்யுமாறு கொழும்பு – கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ட இன்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.