அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு

🕔 June 15, 2017

தேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில்,  வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார்.

கனடா மற்றும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை தாம் இதுவரை சந்துத்து, அரசாங்கம்  தேர்தலை நடத்தாமை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக, தினேஷ் குணவர்தன இதன்போது மேலும் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றங்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான தேர்தல்களை நடத்தாமல் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments