ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

🕔 July 15, 2015

Mahinda - 002.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்திலேயே,  கூட்டமைப்பின் – தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டார்.

இன்று புதன்கிழமை மதியம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் மேற்படி கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், ஐ.ம.சு.கூட்டப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைமைப் பதவியை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பெடுத்துக் கொண்டார் என, முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்