ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருடன் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் என்று சு.கட்சியின் ஊடக இணைப்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
சு.கட்சியில் அங்கம் வகிக்கும் இவர்கள், கட்சியலிருந்து விலகிச் சென்று, ஐ.தே.கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சு.கட்சி அங்கத்துவத்திலிருந்து இவர்களை இடைநிறுத்தும் தீர்மானம், இன்று மதியம் நடைபெறவுள்ள சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று, திலங்க சுமதிபால மேலும் கூறினார்.