அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு; சிறப்பாக நிகழ்ந்தேறியது
🕔 June 11, 2017
– றிசாட் ஏ காதர், படங்கள்: கே.ஏ. ஹமீட் –
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பேரைவயின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று ‘ஆசியன் ஷெப்’ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுத்தீன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.எல்.எம். சலீம், பிரதேச செயலாளர்கள் ,கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உட்பட் , கல்வியலாளர்கள் அரசியற் பிரமுகர்கள், பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்கள் மற்றும் உலமாக்கள் புத்திஜீவிகள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
அம்பாரை மவாட்ட ஊடகவியலாளர் பேரவையின் இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக அஷ்ஷேஹ் கலாமுல்லா (றஷாதி) கலந்து கொண்டு மார்க்க சொற்பொழிவாற்றினார். இதன்போது, பேரவையின் ஆலோசகராகவிருந்து கடந்தவாரம் காலமான மூத்த ஊடகவியலாளர் எம்.ஐ.எம். முஸ்தபா (ஓய்வு பெற்ற விரிவுரையாளர்) அவர்களுக்கான விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.