முஸ்லிம்களின் கடைக்கு தீ வைத்தவர், பொது பலசேனாவைச் சேர்ந்தவர்: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

🕔 June 11, 2017

முஸ்லிம்களின் மகரகம மற்றும் நுகேகொட கடைகளுக்கு தீ வைத்தார் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள கசுன் குமார எனும் நபர், பொது பலசேனா அமைப்பைச் சேர்ந்தவர் என பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

மேற்படி நபர், நீண்ட காலமாக பொது பலசேனா அமைப்பில் இணைந்து செயலாற்றி வருவதாகவும், அந்த அமைப்பின் நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்களில் இவர் பங்கு பற்றியுள்ளார் எனவும், பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்