முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துக்கான தடை; பின்வாங்கியது அரசாங்கம்
முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை தடைசெய்வதற்கு தாம் முன்னெடுத்த நடவடிக்கையினை, இடை நிறுத்துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள், போக்குவரத்து அமைச்சில் முன்னெடுத்த கலந்துரையாடலின்போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசத்தைப் பயன்படுத்தி, பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இதனையடுத்து, முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசத்தை அணிவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையொன்றினை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.