காணாமல் போனது மியன்மார் விமானம்; 116 பேர் உள்ளே
மியன்மார் ராணுவ விமானமொன்று 116 பேருடன் இன்று புதன்கிழமை காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கிலுள்ள மெயிக் மற்றும் யங்கோன் நகரங்களுக்கிடையில் இந்த விமானம் காணாமல் போனதாக மியன்மார் ராணுவ பிரதானி மற்றும் விமான நிலைய தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
தென் பகுதியிலுள்ள டாவி எனும் நகரத்தை அடைவதற்கு 20 மைல்கள் உள்ளபோது, திடீரென்று விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாக ராணுவ பிரதானியின் அலுவலகம் கூறியுள்ளது.
குறித்த விமானத்தில் 105 பயணிகளும் 11 விமானப் பணியாளர்களும் இருந்தனர் என்று, தன்னை அடையாளப்படுத்த விரும்பாத, விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.