குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார்

🕔 June 6, 2017
– எம்.ஜே.எம். சஜீத் –

ன ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இறக்காமம் குடிவில் நன்னீர் மீனவர் சங்கம் ஏற்பாடு செய்த மூவின மக்களும் கலந்துகொள்ளும் இப்தார் நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை குடுவில்  ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு  இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் பிரமுகர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இப்தார் நிகழ்வில் பௌத்த மற்றும் இந்து மதத்தலைவர்கள் உட்பட மாணிக்கமடு, தீகவாபி பிரதேச தமிழ், சிங்கள மக்களும் கலந்துகொண்டமை சிறப்பம்சாமாகும்.

நாட்டில் ஒரு சிலர் இனவெறுப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான நிகழ்வுகள் போற்றத்தக்கவை என்று, நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்