கட்டாருக்கான விமானசேவை தொடரும்: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு
கட்டார் நாட்டுக்கான விமான சேவையினை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் அட்டவணைக்கிணங்க மேற்கொள்ளும் என்று, அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வளைகுடாவைச் சேர்ந்த பல நாடுகள், கட்டாருக்கான விமான சேவையினை இடைநிறுத்தியுள்ள நிலையிலேயே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
“அட்டவணைகளுக்கிணங்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது விமான சேவையினை, தொடர்ந்தும் மேற்கொள்ளும். அதேவேளை, அங்குள்ள நிலைவரங்களை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்” எனவும் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.