மலை நாட்டு பொலிஸ் மா அதிபர், முடிந்தால் என்னை கைது செய்து காட்டட்டும்: ஞானசார தேரர் சவால்

🕔 June 5, 2017

தெற்கைச் சேர்ந்த தன்னை, மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ் மா அதிபர், முடிந்தால் கைது செய்து காட்டட்டும் என்று ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.

தன்னை கைதுசெய்வதற்கு முன்னர், அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரை கைதுசெய்ய வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தளமொன்றுக்கு மேற்படி விடயங்களை ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

பொலிஸாருக்கு அஞ்சி நான் செயற்பட மாட்டேன். தெற்கைச் சேர்ந்த என்னை, மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ்மா அதிபர் முடிந்தால் கைதுசெய்து காட்டட்டும். என்னை கைதுசெய்தால் அதற்கான ஆயத்தங்களுடன் இருக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

ஞானசார தேரரை விரைவில் கைது செய்வோம் என்று, பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ள நிலையிலேயே, ஞானசாரரர் மேற்படி சவாலினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்