பதிலடி: சஊதிக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்துவதாக கட்டார் ஏர்வேஸ் அறிவிப்பு

🕔 June 5, 2017

ட்டார் நாட்டுடனான உறவகளைத் துண்டிப்பதாக சஊதி அரேபியா அறிவித்ததை அடுத்து, சஊதிக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்துவதாக கட்டார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவாகச் செயல்படுவதாகக் தெரிவித்து, சஊதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரேட், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், கட்டாருடனான தூதரகத் தொடர்புகள் உள்பட  அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்தன.

இதனையடுத்து கட்டாரின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது.

மேலும் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நாளை முதல் கட்டாருக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தவுள்ளதாகவும் அறிவித்துவிட்டன.

இந்நிலையில், சஊதி அரேபியாவுக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்திவிட்டதாக, கட்டார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

கட்டார் ஏர்வேஸின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்