கட்டாருடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்தன; பயண வழிப் பாதைகளையும் பயன்படுத்த தடை

🕔 June 5, 2017

ஊதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் கட்டாருடனான தொடர்புகளை துண்டித்துள்ளதாக அறிவித்துள்ளன.

இதனையடுத்து, சவுதி அரேபியா தனது தூதரக உறவுகளை துண்டித்துக்கொண்டுள்ளதோடு, கட்டார் நாட்டு எல்லைகளை மூடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மேற்படி நாடுகள் தமது கடல் மற்றும் வான் வழிப் பாதைகளை கட்டார் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளது.

பயங்கரவாதத்துக்கு கட்டார் துணை போவதாகக் குற்றம் சாட்டியே, மேற்படி நிலைப்பாட்டினை சவுதி அரேபியா, எகிப்து, பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானுடன் கட்டார் உறவுகளை பேணுவனாலே, மேற்படி நாடுகள் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்