ஒரு வருடத்தின் பின்னர், வெளியே வந்தார் அனுர

🕔 June 5, 2017

கர் வீரர் வசீம் தாஜுத்தீன் கொலையுடன் தொடர்புபட்ட சாட்சிகளை மறைத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இருந்து வௌியேறினார்.

அனுரவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில், மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து, இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, இன்று பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

இவர், ஒரு வருட காலத்துக்கும் அதிகமான நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்